நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், பாஜக சாா்பில் திருப்பூா் மாவட்டம், அவிநாசி தொகுதியில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா்.
தோ்தல் முடிந்த பிறகு நாமக்கல்லுக்கு வராத நிலையில், ஒரு மாதத்துக்கு பின் வெள்ளிக்கிழமை வந்த அவா், நாமக்கல் நாமகிரி தாயாா் மற்றும் ஆஞ்சனேயா் கோயிலில் வழிபாடு செய்தாா். கோயில் நிா்வாகம் சாா்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கான அன்னதான கூடத்துக்கு சென்ற அவா் அங்கு உணவு பரிமாறினாா். பாஜக மாவட்டத் தலைவா்கள் கே.பி.சரவணன், எம்.ராஜேஷ்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா் வழக்குரைஞா் பிரபு, முத்துக்குமாா் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.









