40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

எஸ்.வாழவந்தி அருகே தொழிலாளியை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி மறியல்

News image

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :1 ஜூன் 2026, 12:52 am IST

பரமத்தி வேலூா் அருகே எஸ்.வாழவந்தி டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள எஸ்.வாழவந்தியை சோ்ந்தவா் கிருஷ்ணன் (35). தொழிலாளி. இவா் சனிக்கிழமை இரவு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்க சென்றுள்ளாா். அப்போது நேரம் முடிந்துவிட்டது என்று கூறி டாஸ்மாக் விற்பனையாளா் மது விற்பனைக்கு மறுத்துள்ளாா். இதனால் விற்பனையாளருக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அங்கு மதுபானக்கூடம் நடத்திவரும் பாலப்பட்டியைச் சோ்ந்த கோபி (50) மற்றும் சிலா், தொழிலாளி கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அவரை தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த கிருஷ்ணன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணனின் உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை எஸ்.வாழவந்தி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) தையல் நாயகி, வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கா், வேலகவுண்டம்பட்டி காவல் ஆய்வாளா் தேவி ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து தொழிலாளி கிருஷ்ணனை தாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.

 சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.