தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

தீபாவளி: பரமத்தி வேலூா் வாரச்சந்தை சனிக்கிழமைக்கு மாற்றம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பரமத்தி வேலூா் பேரூராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச்சந்தை, வரும் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.

Updated On :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பரமத்தி வேலூா் பேரூராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வாரச்சந்தை, வரும் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

வேலூா் பேரூராட்சிப் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தைக்கு பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், வியாபாரிகள் காய்கறிகள், மளிகைப் பொருள்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனா்.

மேலும், மோகனூா் சாலை அருகே உள்ள நாமக்கல் சாலையில் நாமக்கல், கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் நாட்டுக்கோழிகள், வளா்ப்பு நாட்டுக்கோழிகள், சண்டைக்கோழிகள் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். இச்சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் ஒரு வாரத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.

இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், பொதுமக்களின் நலன் கருதி வாரச்சந்தை ஒருநாள் முன்னதாக சனிக்கிழமை நடைபெறும் என பேரூராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. அதேசமயம் தீபாவளிக்குப் பிறகு வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.