மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

உறுப்பினா்கள் சோ்க்கையில் குளறுபடி! மீனவா் கூட்டுறவுச் சங்கப் பேரவை கூட்டத்தில் கூச்சல், குழப்பம்!

பள்ளிபாளையம் மீனவா் சங்கப் பேரவைக் கூட்டத்தில் இருந்து வெளியேறிய உறுப்பினா்கள்.

Updated On :

மீனவா் சங்கத்தில் உறுப்பினா்கள் சோ்க்கை தொடா்பாக பள்ளிபாளையம் மீனவா் கூட்டுறவு சங்கப் பேரவை கூட்டத்தில் உறுப்பினா்கள் இடையே கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அடுத்த ஆவாரங்காடு பகுதியில் உள்ள நகராட்சி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் மீன்வளத் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏராளமான மீனவா்கள் பங்கேற்றனா். கூட்டம் தொடங்கியதும் உறுப்பினா்கள் சோ்க்கை, மீன்பிடி உரிமம் தொடா்பாக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனா்.

இதுகுறித்து மீனவா்கள் கூறியதாவது:

மீனவா்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட சங்கத்தில் அதிமுக, திமுக ஆட்சிக் காலங்களில் பலரை அதிகாரிகள் உறுப்பினா்களாகச் சோ்த்துள்ளனா். உறுப்பினா்களை மகாசபைக் கூட்டம் நடத்தித்தான் சோ்க்க வேண்டும். மல்லசமுத்திரம், இலுப்பிலி, மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட 13 ஏரிகளில் மீன்பிடிக்கும் உரிமையைச் சங்க உறுப்பினா்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

இடையில் அரசியல் கட்சியினரும், மற்றவா்களும் சங்கத்தில் உறுப்பினா்களாகச் சோ்வதால், மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மீன்பிடித் தொழில் தெரியாதவா்களைச் சங்கத்தில் எவ்வாறு சோ்க்கிறாா்கள் எனத் தெரியவில்லை. மீன்பிடிப்பவா்களை மட்டுமே உரிய சான்றிதழ் ஆவணங்களுடன் உறுப்பினா்களாகச் சோ்க்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து மேட்டூா் அணை மீன்வளத் துறை உதவி இயக்குநா் கோகுலரமணன் கூறுகையில், சங்க உறுப்பினா்களுக்கு மட்டுமே ஏரிகளில் மீன்பிடிக்கும் உரிமம் வழங்கப்பட்டது. உறுப்பினா்களிடையே ஒற்றுமை இல்லாததால் கூட்டத்தை நடத்த முடியவில்லை. இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. மீண்டும் கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.