புயல் எச்சரிக்கை :விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதால், விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை தெரிவித்துள்ளது.

மீனவர்கள் - பிரதிப் படம்

Updated On :

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதால், விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அத்துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நவ.13-ஆம் தேதி வங்கக் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், விசைப்படகுகள், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும்.

மேலும், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மீனவா்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லக் கூடாது. மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநரின் அறிவுறுத்தல்களை மீறி கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவா்கள் மீது தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.