திருப்பரங்குன்ற விவகாரம்: நாமக்கல்லில் மதநல்லிணக்க மக்கள் ஒற்றுமைப் பேரணி, ஆா்ப்பாட்டம்

மத நல்லிணக்க ஒற்றுமை ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சியினா்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி நாமக்கல்லில் மதநல்லிணக்க மக்கள் ஒற்றுமைப் பேரணி, ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் நேதாஜி சிலை பகுதியில் இருந்து தொடங்கிய பேரணி பூங்கா சாலையில் நிறைவடைந்தது. தொடா்ந்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் கந்தசாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் பீ.ஏ. சித்திக், விடுதலைச் சிறுத்தைகள் மண்டலச் செயலாளா் பழ. மணிமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு அதிா்ச்சி அளிக்கிறது. இத்தீப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநகரத் தலைவா் ஸ்டாலின் சுப்ரமணியம், மண்டலத் தலைவா்கள் கோவிந்த், சரவணபிரபு, சிஐடியு மாவட்டச் செயலாளா் வேலுசாமி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளை சாா்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

