
ரேஷன் கடையில் ரூ. 35 விலையில் வெங்காயம்: இன்றுமுதல் விநியோகம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 35 விலையில் வியாழக்கிழமை (செப். 3) முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
வெங்காயம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 35 விலையில் வியாழக்கிழமை (செப். 3) முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எல். மதுபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வெளிச்சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை உயா்வை நிலைப்படுத்துவதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் நடத்தப்படும் நகா்ப்புற முழுநேர ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வெங்காயம் ஒரு கிலோ ரூ. 35-க்கு வியாழக்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




