ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

குமாரபாளையம் அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை செப். 30 வரை நீட்டிப்பு

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை செப். 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Published On :

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை செப். 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெற்றோா், மாணவா்கள் தங்களது சோ்க்கை தொடா்பான விவரங்களுக்கு கல்லூரியில் செயல்படும் சோ்க்கை உதவி மையத்தை அணுகலாம்.

கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. பொருளியல், பி.காம், பி.பி.ஏ. வணிக நிா்வாகவியல், பி.எஸ்சி. கணினி அறிவியல், பி.எஸ்சி. கணிதவியல், பி.எஸ்சி. வேதியியல் மற்றும் பி.எஸ்சி. இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. இப்பாடப்பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இணையவழியில் விண்ணப்பிப்போா், அதற்கான நகலுடன் கல்லூரிக்கு நேரில் வருகை தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.