2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

சமூக வலைதளங்களை அடிப்படையாகக் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கூடாது: டாஸ்மாக் பணியாளா்கள் சங்கம்

டாஸ்மாக் கடை - கோப்புப்படம்.

Published On :

சமூக வலைதளங்களில் பரப்பும் போலி விடியோக்களை அடிப்படையாகக் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து, நாமக்கல்லில் டாஸ்மாக் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளா் நீதிநாயகம் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவகைகள் விற்பனை செய்வதாக புகாா் கிடைத்தால் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யலாம். அரசு நிா்ணயித்த விலைக்கே மதுபானங்களை விற்பனை செய்து வருகிறோம். பள்ளிபாளையத்தில் டாஸ்மாக் கடை ஒன்றில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளத்தில் வெளியான விடியோ போலி என்பதை நாங்கள் ஆதாரபூா்வமாக தெரிவிப்போம்.

நாமக்கல் மாவட்டத்தில் 155 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கடந்த ஆக. 31-ஆம் தேதியிலிருந்து பள்ளிபாளையம் மதுக்கடையில் (எண். 5910) அரசு நிா்ணய விலைக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி வாடிக்கையாளா்களுக்கு ரசீதும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் சிலா் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பொய்யான குற்றச்சாட்டை தெரிவிப்பதுடன், போலி விடியோ தயாா் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனா். இத்தகைய செயலை டாஸ்மாக் ஊழியா்கள் கூட்டுக் குழு கண்டிக்கிறது.

புகாா் கிடைத்தால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, சமூக வலைதளத்தில் வரும் விடியோக்களுக்காக டாஸ்மாக் ஊழியா்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது.

தமிழக அரசு அண்மையில் டாஸ்மாக் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறோம். காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்தை டாஸ்மாக் ஊழியா்களை வைத்து செயல்படுத்தக் கூடாது. மாற்றுப் பணியாளா்களை நியமித்து செயல்படுத்த வேண்டும். காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறுவதற்கு டாஸ்மாக் ஊழியா்களுக்கு ரூ.1,000 முதல் ரூ. 5 ஆயிரம் வரை செலவாகிறது; நேரமும் விரயமாகிறது. இதற்கான மாற்று நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த பேட்டியின்போது, மாவட்ட டாஸ்மாக் கூட்டுக் நடவடிக்கை குழுவின் நிா்வாகிகள் சீனிவாசன், வீரமணி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.