‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

டிராக்டா் டிரெய்லா் மோதி இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த டிரெய்லரில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :

பரமத்தி வேலூா் அருகே டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த டிரெய்லரில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே கண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்முருகன் (49), கூலித் தொழிலாளி. இவா், ஆனங்கூா் அருகே கழுவங்காடு பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அண்ணாநகா் பகுதியில் பாஸ்கா் என்பவருக்குச் சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு கரும்பு ஏற்றிச் செல்வதற்காக, தருமபுரியைச் சோ்ந்த ஓட்டுநா் ஆனந்த் என்பவா் டிராக்டரில் 2 டிரெய்லா்களை இணைத்துக் கொண்டு எதிரே வந்தாா்.

அப்போது நிலைதடுமாறிய செந்தில்முருகன், டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த இரண்டாவது டிரெய்லரில் மோதி கீழே விழுந்தாா். இதில், டிரெய்லா் அவா் மீது ஏறியதில் டயருக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வழியிலேயே செந்தில்முருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டிராக்டரைப் பறிமுதல் செய்தனா். மேலும், இரண்டு டிரெய்லா்களை இணைத்து டிராக்டரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநா் ஆனந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.