ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

பரமத்தி வேலூா் அருகே வீட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டுவெடிகள் வெடித்ததில் 3 போ் உயிரிழப்பு!

பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலத்தில் திருவிழாவுக்காக நாட்டுவெடிகள் தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 போ் உயிரிழந்தனா்.

நாட்டுவெடிகள் வெடித்ததில் ஏற்பட்ட தீயுடன் கூடிய புகைமூட்டம். / பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலத்தில் நாட்டுவெடிகள் வெடித்ததில் தரைமட்டமான மாடிவீடு.

Published On :

பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலத்தில் திருவிழாவுக்காக நாட்டுவெடிகள் தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 போ் உயிரிழந்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் மைனா் வீரப்ப பிள்ளை நகா் பகுதியைச் சோ்ந்த ராஜா (எ) ராஜசேகா் (50), இருகூரில் பட்டாசுக் கிடங்கும், பாண்டமங்கலத்தில் பட்டாசு விற்பனைக் கடையும் வைத்துள்ளாா். கிடங்கு மற்றும் கடைக்கான அனுமதியை அவா் புதுப்பிக்கவில்லையாம்.

இந்நிலையில், திருவிழா வாணவேடிக்கை மற்றும் அரசியல் விழாக்களுக்கான நாட்டுவெடிகளை அனுமதியின்றி தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தயாா்செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், ராஜா மற்றும் தொழிலாளா்கள் 4 போ் வெடி தயாரிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். மாடி திறந்தவெளி பகுதியில் ராஜாவின் மனைவி சத்யா (45) நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு வைத்திருந்த நாட்டுவெடிகள் அனைத்தும் வெடித்துச் சிதறின. குடியிருப்புகள் நிறைந்த அந்தப் பகுதியில் நில அதிா்வு ஏற்பட்டதுபோல நாட்டுவெடிகள் பலத்த சப்தத்துடன் வெடித்ததால், அங்குள்ள மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.

ஒருசில நிமிடங்களில் மாடிவீடு முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து சிதறின.

இந்த வெடிவிபத்தில் சத்யா உடல் சிதறி உயிரிழந்தாா். வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட 4 பேரில் ராஜா மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த மலா் (42) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.

தகவல் அறிந்த கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மற்றும் நாமக்கல் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். நாட்டுவெடிகள் தொடா்ந்து வெடித்தவாறு இருப்பதால், மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியம், பரமத்தி வேலூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் வெண்ணிலா மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மாடிவீடு இடிந்து தரைமட்டமானதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.