தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

மேட்டூரில் தேங்காய் சுட்டு சுவாமிக்குப் படையல்

மேட்டூரில் ஆடி முதல் நாளான வியாழக்கிழமை தேங்காயைச் சுட்டு சுவாமிக்குப் படையலிட்டனர். ஆடி முதல் நாளில் தமிழர்கள் தேங்காயில் எள், கடலை, சர்க்கரை, அவல் உள்ளிட்ட பல

Updated On :18 ஜூலை 2014, 3:23 am IST

மேட்டூரில் ஆடி முதல் நாளான வியாழக்கிழமை தேங்காயைச் சுட்டு சுவாமிக்குப் படையலிட்டனர்.

ஆடி முதல் நாளில் தமிழர்கள் தேங்காயில் எள், கடலை, சர்க்கரை, அவல் உள்ளிட்ட பல தானியங்களை போட்டுப் வைப்பார்கள். பின்னர், வீட்டிற்கு எதிரே அந்த தெருவில் உள்ளவர்கள் தேங்காய்களை குச்சிகளில் குத்தி வைத்து நெருப்பில் வேக வைப்பார்கள். பிறகு, அங்குள்ள விநாயகர் கோயில் வைத்து படைத்து பிரசாதம் வழங்குவார்கள். மேட்டூர் அருகே உள்ள புதுச்சாம்பள்ளி சுப்பிரமணிய நகரில் தேங்காயை வேகவைத்து விநாயகருக்கு படைக்கப்பட்டது. பின்னர், தேங்காய் வேகவைத்த குச்சிகளைக் கொண்டு சிறுவர், சிறுமியர் விளையாடினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.