சங்ககிரி வட்ட வழங்கல் துறை சார்பில் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் சங்ககிரி அருகே உள்ள ஒலக்கசின்னானூர் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
வட்ட வழங்கல் துறை அலுவலர் ஜி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து பொதுமக்கள் கடைகளில் பொருள்கள் வாங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார். பின்னர், அவரிடம் பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்து 20 மனுக்களை வழங்கினர். மனுக்களைப் பெற்ற அவர் அந்த முகாமிலேயே அதற்கான உத்தரவை வழங்கினார்.
ஒலக்கசின்னானூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயந்தி, ஊர்பொதுமக்கள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

