தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வாழப்பாடியில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டத்துக்கு ஆதரவுதெரிவித்து,

News image
Updated On :18 மார்ச் 2017, 5:25 am

தினமணி

வாழப்பாடியில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டத்துக்கு ஆதரவு
தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்துக்கு வாழப்பாடி வட்டத் தலைவர் எம்.மனோகரன் தலைமை வகித்தார். வட்ட செயலர் ஏ. சண்முகம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
 போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். முடிவில் வட்ட நிர்வாகி கவிதா நன்றி கூறினார்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.