மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தமிழகத்தில் புதிய சாலை பாதுகாப்பு கொள்கை உருவாக்க வலியுறுத்தல்

அதிக சாலை விபத்துகள் நிகழும் தமிழகத்தில் புதிய சாலை பாதுகாப்புக் கொள்கை வகுக்க வேண்டும் என தமிழ் சாலை பண்பாட்டுக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பையா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 5:01 am

தினமணி

அதிக சாலை விபத்துகள் நிகழும் தமிழகத்தில் புதிய சாலை பாதுகாப்புக் கொள்கை வகுக்க வேண்டும் என தமிழ் சாலை பண்பாட்டுக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பையா தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
 தமிழகம் முழுவதும் குறைவான நேரத்தில் பேருந்து வழித்தட உரிமம் வழங்கப்பட்டிருப்பதால் விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. மேலும் 50 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து வழித்தட உரிமங்கள் இன்றைக்கும் அப்படியே உள்ளன.
 ஆனால் முன்பு அளிக்கப்பட்ட உரிமங்களை மாற்றி அமைக்காமல் அப்படியே இருப்பதால் தனியார் பேருந்துகளை அதிக வேகத்தில் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஓட்டுநர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.
 இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறுகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் 16,000 பேர் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். 1,50,000 பேர் படுகாயமுற்று உடல் உறுப்புகளை இழக்கின்றனர்.
 நடைபாதையே இல்லாத தமிழகத்தில் பள்ளிக்குழந்தைகள் சாலைகளில் பாதுகாப்பில்லாத பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் சாலையில் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 ஜலகண்டபுரம் சாலை வழியாக சேலம் செல்லும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளின் வழித்தட உரிம நேரங்களை ஆய்வு செய்து உரிய நேரங்களை ஒதுக்கி, பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 தமிழகம் முழுவதும் உள்ள அரசு, தனியார் பேருந்துகளின் வழித்தட உரிமங்களை ஆய்வு செய்து உரிய நேரங்களை ஒதுக்கி சாலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவிலேயே அதிக சாலை விபத்து நடக்கும் மாநிலமாக உள்ள தமிழகத்தில் புதிய சாலை பாதுகாப்புக் கொள்கையை வகுக்க வேண்டும். புதிய சாலை பாதுகாப்புக் கொள்கையை உருவாக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
 குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்தால் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நடந்து செல்பவர்களுக்கு சாலையின் இருபக்கங்களிலும் நடைபாதை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.