ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

வகங்கை மாவட்டம் மானாமதுரைச் சோ்ந்த விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி

News image
தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (பொறுப்பு) ஜி.வெங்கடராமன்.
Updated On :10 மார்ச் 2026, 1:53 am

தினமணி செய்திச் சேவை

சென்னை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரைச் சோ்ந்த விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் பொறுப்பு டிஜிபி ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா்.

மானாமதுரையில் 2 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் டெலிசன் (26) என்பவரை போலீஸாா் பிடிக்க முயன்றபோது, பாலத்தில் இருந்து கீழே விழுந்து, வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனை சோ்க்கப்பட்ட ஆகாஷ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக மதுரை மாநகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

சிபிசிஐடிக்கு மாற்றம்: இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறையின் பொறுப்பு டிஜிபி ஜி.வெங்கடராமன் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதன் அடிப்படையில், சிபிசிஐடி அதிகாரிகள், வழக்குக்குரிய ஆவணங்களை மதுரை மாநகர காவல் துறையினரிடம் பெற்று விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனா்.