அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தொளசம்பட்டி ஏரி பகுதியில் 75 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

ஓமலூர் அருகே ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 75 கட்டடங்கள் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

News image
Updated On :16 நவம்பர் 2017, 4:59 am

தினமணி

ஓமலூர் அருகே ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 75 கட்டடங்கள் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
 ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீர்வரும் பாதைகளை பலரும் ஆக்கிரமிப்பு செய்து அடைத்து விட்டனர். இதனால், ஏரிக்கு பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லை. இந்தநிலையில் ஏரியின் கரையை ஒட்டி தொளசம்பட்டி கிராமம் உள்ளதால், கிராமத்தைச்
 சேர்ந்த பலரும் ஏரியின் கரையோரங்களில் உள்ள நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அடுக்குமாடிக் கட்டடங்கள், வணிக வளாகங்கள், கடைகள், ஹோட்டல்களை கட்டி பயன்படுத்தி வந்தனர். மேலும், வீடுகள் இல்லாத ஏழை மக்களும் வீடுகளைக் கட்டி குடியிருந்து வந்தனர்.
 இந்தநிலையில் தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஆனால், தொளசம்பட்டி ஏரியில் இருந்த கட்டடங்களை அதிகாரிகள் அகற்றாமல் இருந்து வந்தனர்.
 இதனைத் தொடர்ந்து இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு
 ஏழை எளிய மக்களின் வீடுகள் அகற்றப்பட்டன. நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டதால் மாடிக் கட்டடங்கள் இடிக்கப்படாமல் இருந்து வந்தன. ஆறு மாத கால அவகாசம் முடிந்த நிலையில் அதிரடியாக அடுக்குமாடிக் கட்டடங்கள் உள்பட அனைத்துக் கட்டடங்களையும் இடிக்கும் பணிகள் தொடங்கின.
 ஓமலூர் வருவாய்த்துறை அதிகாரிகள் 15 பொக்லைன் இயந்திரங்களுடன் தொளசம்பட்டி ஏரிக்கு சென்று, வீடுகள்,வணிக வளாகங்கள், கடைகள் உள்பட75 கட்டடங்களை அகற்றும் பணிகளை தொடங்கினர்.
 அப்போது,பொதுமக்கள் மேலும், அவகாசம் கேட்டனர். அதற்கு மறுப்புத் தெரிவித்த அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
 இதனிடையே வீடுகளை இழந்த ஏழை எளிய மக்கள் 52 பேருக்கு இலவச வீட்டுமனைகளை ஓமலூர் வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.