இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஆத்தூரில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 4:20 am

தினமணி

சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.
 ஆத்தூர் கடைவீதி அஞ்சல் நிலையம் முன் மாவட்டத் தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமையில் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்டப் பொருளாளர் ஆர்.ஓசுமணி வரவேற்றுப் பேசினார்.
 ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.பெரியசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் சி.பழனிமுத்து, எம்.ஆர்.சுந்தரம், மூத்த தலைவர் எஸ்.சித்தமலை, நரசிங்கபுரம் நகர மன்ற முன்னாள் தலைவர் எஸ்.சக்ரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். நகரத் தலைவர் எல்.முருகேசன் நன்றி கூறினார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.