தம்மம்பட்டி இரும்புக் கடையில் தகரங்கள் சரிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.
செந்தாரப்பட்டி சிவன் கோயில் தெருவைச்சேர்ந்தவர் அருணாசலம்(42). ஆட்டோ ஓட்டுநர். இவர், தகரங்கள் வாங்குவதற்கு தம்மம்பட்டியில் உள்ள ஒரு இரும்புக் கடைக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். அப்போது ஊழியர்கள் தகரங்களை இறக்கும்போது, அங்கிருந்த அருணாசலத்தை உதவிக்கு அழைத்துள்ளனர். அப்போது ரேக்கில் இருந்த தகரங்கள், ஓட்டுநர் அருணாசலம் மீது சரிந்து விழுந்துள்ளது. அதில் அருணாசலம் காயமடைந்தார். இதையடுத்து அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நிகழ்ந்த இரும்புக்கடை உரிமையாளர் பிரபாகரன் மீது, ஆட்டோ ஓட்டுநர் அருணாசலம் மனைவி விஜயலட்சுமி தம்மம்பட்டி போலீசில் புதன்கிழமை புகார் அளித்துள்ளதையடுத்து , காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் ,வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு ஏற்றாா்போல போலீஸாா் செயல்பட வேண்டும்: சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ்

வாய்ப்புகள் தேடிவரும் கடக ராசிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 07)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 7 2026) 12 ராசிகளுக்கும்! பொருளாதார நிலை மேம்படும்!





