செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

வீட்டின் ஓட்டை பிரித்து நகை திருட்டு: இளைஞர் கைது

இளம்பிள்ளை அருகே வீட்டின் ஓட்டைப் பிரித்து மூன்றரை பவுன் நகையைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 

Updated On :5 ஏப்ரல் 2018, 7:09 am IST

இளம்பிள்ளை அருகே வீட்டின் ஓட்டைப் பிரித்து மூன்றரை பவுன் நகையைத் திருடிச் சென்ற இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
இளம்பிள்ளை அருகேயுள்ள வெள்ளை பிள்ளையார் கோயில் தெரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் அபுசாலீபு (36). இவர், செவ்வாய்க்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு அப்பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார்.  அப்போது வீட்டின் ஓட்டைப் பிரித்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்றரை பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்துள்ளது.    
இது குறித்து அபுசாலீபு அளித்த புகாரின் பேரில் மகுடஞ்சாவடி  போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.  
காவல் உதவி ஆய்வாளர் பூபதி தலைமையிலான போலீஸார் சித்தர் கோயில் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின்பேரில் இளைஞரை பிடித்து விசாரித்ததில் அவர் வெள்ளை பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (26) என்பதும், மளிகைக் கடைக்காரர் வீட்டில் திருடியதும் தெரிய வந்தது. 
இதையடுத்து அவரைக் கைது செய்து மூன்றரை பவுன் நகையை பறிமுதல் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.