தாரமங்கலம் அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
சங்ககிரி உறுப்பினர் எஸ்.ராஜா முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மகா கும்பாபிஷேக விழா முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் கூறியது: ஓமலூர் வட்டம், தாரமங்கலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மகாகும்பாபிஷேக விழா 18-ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் 11 மணிக்குள் மங்கள இசை, விநாயகர் பூஜை, சர்வ தேவதா அனுக்ஞை எஜமானர் சங்கல்பம், வாஞ்சாகல்ப கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதலும், 19, 20, 21 ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. அதனைத் தொடர்ந்து, 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இவ்விழா முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும், தரைதளம், கோபுர வேலைப்பாடுகள், கோயில் சுற்றுச்சுவர் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
விழாவில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். குடிநீர், மருத்துவ வசதி, வாகனங்களை நிறுத்துவதற்கான தேவையான இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
ஆய்வின் போது, சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் ராமதுரைமுருகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவிந்தன், கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உமாதேவி, தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில் செயல்அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: 3 அறிமுக வீரர்களுடன் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! ராஜஸ்தான் பாஜக நிர்வாகி கைது!

கடந்த 4 ஆண்டுகளாக இபிஎஸ் செய்த ஒரே வேலை நீக்குவதுதான்: சி.வி. சண்முகம் குற்றச்சாட்டு!

அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
