தம்மம்பட்டியில் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது.
தம்மம்பட்டி, துறையூர், செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி , வீரகனூர் உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை பழங்கள் செடிகளில் இருந்து உதிர்ந்துவிடுவது அதிகரித்துள்ளது. இதனால் கடைகளுக்கு விற்பனைக்கு எலுமிச்சை வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. முன்பு கடைகளில் 3 பழங்கள் ரூ. 10- க்கு விற்றது, தற்போது ஒன்று ரூ.5 முதல் ரூ.6 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடைகாலத்தில் எலுமிச்சை பழங்களின் தேவை அதிகரிப்பு, வரத்துக் குறைவால் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
