ஓமலூரில் சாலை போக்குவரத்து வார விழா

ஓமலூரில் போக்குவரத்துக் காவல் துறை மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 29-ஆவது சாலை பாதுகாப்பு வார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ஓமலூரில் போக்குவரத்துக் காவல் துறை மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 29-ஆவது சாலை பாதுகாப்பு வார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சேலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கலந்து கொண்டு பேசுகையில், வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பான பயணத்துக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும். மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் சாலையில் வாகனங்களை இயக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை கூற வேண்டும் என்றார். 
போக்குவரத்து போலீஸார், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகப் பணியாளர்கள், அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் வழங்கினர். தொடர்ந்து, ஓமலூர் வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களின் முகப்பு விளக்குகளிலும் கருப்பு பட்டைகளை ஒட்டினர்.  
மேலும், சேலம் -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, கிராம சாலைகள் வழியாகச் செல்லும் சரக்கு வாகனங்கள் ஆள்களை ஏற்றிச் செல்லக்கூடாது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com