சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்சின்னமலை நினைவுதினம் ஆகஸ்ட் 3-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுவதையொட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கான விதிமுறை மற்றும் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் டி.ராமதுரைமுருகன், துணைக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.அசோக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது :
பள்ளிபாளையம் பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மணிமண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். சங்ககிரி மலைக்கோட்டைக்குச் செல்ல அனுமதியில்லை. 30 (2) காவல் சட்டம் அமலில் உள்ளதால் பொதுக்கூட்டம் நடத்தம், ஊர்வலம், வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. விழாவுக்கு வருவோர் கொடி, பேனர்களை பிடித்து வர அனுமதி இல்லை. தியாகி தீரன் சின்னமலை நினைவிடத்தில் போட்டோ, இதர பொருள்களை எடுத்துச் செல்லவோ, வைக்கவோ அனுமதி இல்லை.
ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கலைந்து சென்று விட வேண்டும். சங்ககிரி பழைய எடப்பாடி சாலை வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது. வாகனங்களில் ஒலிபெருக்கிகளை உபயோகிக்கக் கூடாது. வாகனத்தின் மேல்பகுதியில் அமர்ந்து வரக்கூடாது. விழா சம்பந்தமாக உணவு பொருள்கள் வழங்க அனுமதி இல்லை. தனிநபர்களை தாக்கிப் பேசவோ, முழக்கங்கள் எழுப்பவோ கூடாது.
சங்ககிரி அருகே உள்ள பள்ளிபாளையம் பிரிவு சாலை நினைவு மண்டபம் சென்று நிகழ்ச்சி முடித்து, ஓடாநிலை சென்று விட்டு மாற்றுப்பாதையில்தான் திரும்பி வரவேண்டும். தீரன்சின்னமலை நினைவு நாள் பாதுகாப்பு சம்பந்தமாக சட்டம், ஒழுங்கை பேணிக்காக வேண்டி சங்ககிரி வட்டாரப் பகுதிகளில் 25 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விதிமுறைகள் மீறுவோர் மீது விடியோ பதிவு ஆதாரங்களை கொண்டு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றி அனுமதி ரத்து செய்யப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








