காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

நரசிங்கபுரம் ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் விரிசல்: விபத்து தவிர்ப்பு

நரசிங்கபுரம் ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது குறித்து ரயில் ஓட்டுநர் தகவல் தெரிவித்ததால் புதன்கிழமை இரவு விபத்து தவிர்க்கப்பட்டது.

Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST

நரசிங்கபுரம் ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது குறித்து ரயில் ஓட்டுநர் தகவல் தெரிவித்ததால் புதன்கிழமை இரவு விபத்து தவிர்க்கப்பட்டது.
ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம் நகராட்சிக்குள்பட்ட தளவாய்ப்பட்டி பிரிவு சாலையில் ரயில்வே கேட் உள்ளது. அங்கிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் தண்டவாள இணைப்பில் விரிசல் ஏற்பட்டு, உடைப்பு இருப்பதை சேலம் -விருத்தாசலம் பயணிகள் ரயில் ஓட்டுநர் அந்த இடத்தை இரவு 8 மணிக்கு கடக்கும் போது தெரிய வந்துள்ளது.இதையடுத்து ஆத்தூர் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து ரயில்வே பணியாளர்கள் விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரிசெய்தனர்.இதனால் சேலம் - எழும்பூர் விரைவு ரயில் இரவு 10.30 மணிக்கு வருவது எளிதானது. மேலும் விபத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.தண்டவாளத்தில் விரிசலை உடனடியாக சரிசெய்த ரயில்வே ஊழியர்களை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.