9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

தேவூர் அருகே மோட்டூர் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தொடக்கம்

அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளதையொட்டி தேவூர் அருகே மோட்டூர் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. 

Published On :

அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளதையொட்டி தேவூர் அருகே மோட்டூர் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. 
விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு  சங்ககிரி வட்டம்,  தேவூர், அரசிராமணி செட்டிப்பட்டி அருகே உள்ள மோட்டூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 
மோட்டூரில் சிற்பி சின்னசக்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரசாயனப் பொருள்கள் கலக்காமல் எளிதில் கரையக்கூடிய வகையில் மரவள்ளிக்கிழங்கு மாவு,  களிமண்,  காகிதம்,  சவுக்குக் கட்டைகளைப் பயன்படுத்தி  அரை அடி முதல் 17 அடி  உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை தயார் செய்து வருகின்றனர். இச்சிலைகள் ரூ.50 முதல் ரூ.27 ஆயிரம் வரையிலான விலைகளில் விற்பனைக்கு வைக்க உள்ளனர்.  நிகழாண்டு தலைப்பாகை கணபதி,  ஒரு வாகன கணபதி,  சிங்க வாகனம்,  தர்பார் விநாயகர்,  பாண்டுரங்கன்,  மயில், அன்னம்,  பாம்பே தாமரை,  நந்தி, லிங்கம், ,  பாகுபலி, கஜேந்திரா,  நிலா, ஆதிசேஷன், கிருஷ்ணர், காமதேனு உள்ளிட்ட பல்வேறு வகையிலான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு வளம் பெற வேண்டியும்,  தொழில் வளம் பெருக வேண்டியும் விஷ்ணுவின் கையில் உள்ள  ஸ்ரீசக்கரம் விநாயகர் சிலைக்கு பின்னால்  சுற்றிக் கொண்டிருக்கும்  வகையிலான விநாயகர் சிலைகளும்  தயாரிக்கப்பட்டு வருகின்றன.  தருமபுரி, சேலம், நாமக்கல், சங்ககிரி, எடப்பாடி, மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை, தாரமங்கலம், ஆட்டையாம்பட்டி,  தேவூர், திருச்செங்கோடு,  ஈரோடு மாவட்டம்  சித்தார், அம்மாப்பேட்டை,  குருவரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு  முன்பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.