மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் சாவு

சேலத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய சம்பவத்தில் பெண் உயிரிழந்தார்.

Updated On :

சேலத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய சம்பவத்தில் பெண் உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம், மேச்சேரியைச் சேர்ந்த பூபதியின் மனைவி செல்வி (45) . இவரது உறவினர் 
சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்க்க செல்வி தனது உறவினர் பாலகிருஷ்ணன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சேலம் வந்தார். கொண்டலாம்பட்டி புறவழிச்சாலை அருகில் இருசக்கர வாகனம் வந்த போது பின்னால் வந்த கேரள மாநில லாரி  மோதியது. இதில் செல்வியும், பாலகிருஷ்ணனும் கீழே விழுந்தனர்.அப்போது லாரியின் பின்  சக்கரம் செல்வியின் மீது ஏறியதில் அவர் நிகழ்விடத்திலேயே  இறந்தார்.
இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் காவலர்கள் சம்பவத்துக்கு வந்து செல்வியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்துக்கு காரணமான கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜெயந்த் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி புறவழிச்சாலை பகுதியில் திருச்சி, கோவை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் மற்றும் லாரிகள் சென்று வருகின்றன. இவ்வழியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் அதிக வேகத்தில் சென்று வருவதால் அடிக்கடி சாலை விபத்துகளும் ஏற்படுகின்றன .இதைத் தடுக்க புறவழிச்சாலை பகுதியில் போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.