சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

காவிரியில் வெள்ளப்பெருக்கு: பூலாம்பட்டி பகுதியில் பயிர்கள் சேதம்

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட  அதிக அளவிலான  உபரி நீரால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பூலாம்பட்டி பகுதியில் விவசாயப் பயிர்கள் சேதமடைந்தன.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 8:33 am IST

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட  அதிக அளவிலான  உபரி நீரால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பூலாம்பட்டி பகுதியில் விவசாயப் பயிர்கள் சேதமடைந்தன.
காவிரி  ஆற்றில் கடந்த 13 ஆண்டுகளாக போதிய நீர்வரத்து இல்லாத நிலையில், காவிரி கரையோரப் பகுதிகளான பூலாம்பட்டி, நாவிதன்குட்டை, கோட்டைமேடு, கோனேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வாழை, கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர் வகைகளை பயிர் செய்து  வந்தனர். இந்த நிலையில் அண்மையில்  காவிரி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால், கரையோரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. 
இந்த நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சனிக்கிழமை மாலை  பார்வையிட்ட  மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராமதாஸ் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக விவசாயிகளிடம் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக பாசனத்துக்கு போதிய  தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்பட்டுவந்த தாங்கள், தற்போது வெள்ளப்பெருக்கினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.