வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இளம்பெண்ணிடம் தங்க நகை மோசடி

மேட்டூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலீஸ் போடுவதாகக் கூறி 4 பவுன் தங்க நகையை மோசடி செய்த இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:40 am

DIN

மேட்டூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலீஸ் போடுவதாகக் கூறி 4 பவுன் தங்க நகையை மோசடி செய்த இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். 
மேட்டூர் அருகே உள்ள தொட்டில் பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (35). அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாப்பாத்தி (25), செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் இருவர் வெண்கல பாத்திரங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு பாலீஸ் போடுவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து பாப்பாத்தி தனது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பாலீஸ் போடுவதற்காக கொடுத்தார். இதையடுத்து பாலீஸ் போடுவதற்காக வெந்நீர் எடுத்து வருவதற்காக பாப்பாத்தி வீட்டுக்குள் சென்றார். அப்போது, 4 பவுன் தங்க நகையுடன் இருவரும் ஓடிவிட்டனர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த  அவர் கருமலைக்கூடல் போலீசில் செவ்வாய்க்கிழமை புகார் செய்தார். 
இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.