சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் 9-ஆவது ஆண்டாக இலவச தையல், கணினி பயிற்சிகள் தொடக்க விழா ரோட்டரி சங்க வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.செந்தில்குமார் தலைமை வகித்தார். துணை ஆளுநர் கே.ரமேஷ்பாபு, இலவச தையல், கணினி பயிற்சி வகுப்புகளை தொடக்கி வைத்துப் பேசினார்.
செயலர் ஜெ.நந்தகுமார், பொருளாளர் எஸ்.துரைசாமி, திட்டகுழுத் தலைவர் என்.ராஜம்மா, முன்னாள் தலைவர்கள் எ.வெங்கடேஸ்வரகுப்தா, சி.வெங்கடாசலம் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சங்ககிரி ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கும் முயற்சியாக முதல்முறையாக சங்ககிரி மலை அடிவாரத்தில் இருந்து மையப் பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வரை உள்ள நெகிழிப் பைகள் மற்றும் நெகிழிப் புட்டிகளை சனிக்கிழமை அகற்றினர். நிகழ்ச்சியில் தலைவர் எஸ்.செந்தில்குமார், செயலர் ஜெ.நந்தகுமார், துணைத்தலைவர் எஸ்.தியாகராஜன், முன்னாள் தலைவர்கள் எ.வெங்கடஸ்வரகுப்தா, கே.ராமசாமி மற்றும் உறுப்பினர் திவாகர் ஆகியோர் இப்பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து இப்பணிகளை மேற்கொள்ளப் போவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!
நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள்கள் விற்ற நபர்கள் கைது!

உலகக் கோப்பையின் முதல் திருட்டு: ஹைதி தோல்விக்கு ஃபிஃபாவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள் குவித்து ஷுப்மன் கில் சாதனை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


