ஏற்காடு மாண்ட்போர்டு பள்ளியில் 102-ஆவது ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் முன்னாள் மாணவர் கர்னல் ஜெயந்த் பூவையா தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் அருள்சகோதரர் சூசைஅலங்காரம் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் முன்னாள் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்புகள் நடைபெற்றன. தடகளப் போட்டிகள், நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. பிற்பகல் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயங்களை சிறப்பு விருந்தினர் மனைவி பொன்னு வழங்கினார். தடகளம் , அணிவகுப்புக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கேடயத்தை கேபிரியல் அணிக்கும், நீச்சல் , டிரில் டிஸ்பிளே போட்டிக்கு பேட்ரிக் அணிக்கும், நல்லொழுக்கத்துக்கு மாணவி மாண்ட்போர்டு அணிக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன. விழாவில் மாண்ட்போர்டு அருள் சகோதரர்கள் அகஸ்டின், செபாஸ்டின் , பீட்டர்ராஜன்,போஸ்கோ, கே.வி பால், அலெக்ஸ், முன்னாள் மாண்ட்போர்ட் பள்ளி முதல்வர்கள் ஜார்ஜ் கே.ஜே, வர்கீஸ், கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மமதாவுக்கு எதிரான திரிணமூல் காங். அணியில் 64 எம்எல்ஏ-க்கள்! நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு!

ஒருநாள் தொடர்: விராட் கோலி இடத்தில் களமிறங்கப்போவது யார்?

மூகாம்பிகை கோயிலுக்கு வெள்ளி வாள் காணிக்கை... எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் விஜய்!!

தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


