ஆத்தூர் இந்திய மருத்துவச் சங்கம் நடத்திய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் இந்திய மருத்துவச் சங்கத் தலைவர் ஆர்.ரபீந்திரநாத் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் செயலாளர் எம்.அருண்குமார் வரவேற்றுப் பேசினார்.
நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் எம்.திருநாவுக்கரசு கலந்து கொண்டு மனமே நலமா, மன நலத்தோடு வாழும்வழி, குழந்தைகள் மனநலம் மற்றும் வளர்ப்பு, மனநல மருத்துவரோடு ஒரு கலந்துரையாடல், குழந்தைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். இதில் 700 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆத்தூர் துளுவவேளாளர் சங்கத் தலைவர் ஆர்.வசந்தன், மருத்துவர் எம்.திருநாவுக்கரசுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். மருத்துவர்கள் ரத்தினக்குமார், கே.மாதவன், கே.சண்முகம், கே.சுப்ரமணி, மலர்க்கொடி, சத்ய ப்ரியா உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் விஜயபாஸ்கர் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







