காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் ஓட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Updated On :7 ஜூன் 2018, 9:48 am IST

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் ஓட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 சேலம் தலைமை தபால் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சைக்கிளை ஓட்டிக்கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
 இது தொடர்பாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலர் பிரவீன்குமார் கூறியது: 2008-இல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 144 டாலராக இருந்த போது ரூ.60-க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது.
 ஆனால், தற்போது 80 டாலராக கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், ரூ.35-க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், ரூ.82-க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
 தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் சம்பளம் இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளது. ஆனால், சாமான்ய மக்கள் மற்றும் விவசாயிகளின் வருமானம் சொற்பமாக உள்ளது.
 பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும். இல்லையெனில் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டம் போல் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் மீண்டும் ஒரு போராட்டம் நடைபெறும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.