தம்மம்பட்டி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது குறித்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
தம்மம்பட்டி சிவன்கோயில் அருகே உள்ள பெரியாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை, சந்தைப்பேட்டை அருகே வரட்டாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை என மொத்தம் இரண்டு தடுப்பணைகள் கட்டக் கோரி மக்கள் பொது நலக் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிப்.20-ஆம் தேதி வரை 5 ஆயிரம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட் ட ஆட்சியருக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது. அதன் பின்னர் 3 முறை நேரிலும் கோரிக்கை தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த வாரம் பொதுப்பணித் துறை அதிகாரிகள் குழுவினர் தடுப்பணைகள் கட்டும் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை ஆட்சியரிடம் அளித்தனர். இதையடுத்து தம்மம்பட்டியில் இரு தடுப்பணைகள் கட்டுவது குறித்து மாவட்ட ஆட்சியர் ரோகிணிராம்தாஸ்,புதன்கிழமை பிற்பகல் நேரில் ஆய்வு செய்தார். ஆற்றில் இறங்கி தடுப்பணைகள் கட்ட கோரிக்கை வைக்கப்பட்ட இடங்களை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: தடுப்பணைகள் கட்டுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வரும் வாரத்தில் பொதுப்பணித் துறை நிபுணர்கள் குழுவினர் மீண்டும் ஆய்வு செய்வார்கள். அதனடிப்படையில் தடுப்பணைகள் கட்டுவது குறித்து மாநில அரசுக்கு உரிய கருத்துரு பரிந்துரை செய்து அனுப்பப்படும் என்றார். இதுகுறித்து மக்கள் பொது நலக் கூட்டமைப்பின் தலைவர் நெய்வேலி முத்து, செயலர் கே.கே.சண்முகம், பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் கூறியது: ஆட்சியர் பரிந்துரை பேரில், தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் என்பது உறுதி என்றனர்.
இந்த ஆய்வின்போது, பொதுப்பணித் துறை அதிகாரிகள், தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பழனிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னை விமான நிலையத்தில் ரூ. 5.80 கோடி தங்கம் பறிமுதல்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவா் கைது
கஞ்சா விற்ற இலங்கைத் தமிழா் கைது

ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


