தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற கோட்டை மாரியம்மன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அளவிலான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றன. இந்தப் போட்டியில், வாழப்பாடியை அடுத்த மின்னாம்பள்ளி கோட்டை மாரியம்மன் கல்லூரியில் மூன்றாமாண்டு மெக்கானிக்கல் பிரிவு மாணவர் எம். நவீன் கலந்து கொண்டு வட்டு எறிதல், மும்முறை நீளம் தாண்டுதல் ஆகிய இரு போட்டிகளிலும் முதலிடம் பிடித்து இரட்டைத் தங்கப்பதக்கம் வென்றார்.
மாநில அளவில் சாதனை படைத்த மாணவர் எம். நவீனுக்கு, கோட்டை மாரியம்மன் கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். டீன் மோகன் வரவேற்றார். செயலர் கலைச்செல்வன், இணைச் செயலர் செல்வக்குமார் , முதல்வர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காரிப்பட்டி காவல் ஆய்வாளர் கமலேசன், மாணவர் எம். நவீனுக்கு பதக்கம் அணிவித்து பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.