வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா
சங்ககிரி வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.


சங்ககிரி வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் பொங்கல் திருவிழா பிப்ரவரி 14-ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனையடுத்து அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பிப்ரவரி 28-ஆம் தேதி பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்ற அலகு குத்தியும், தீச்சட்டிகளை ஏந்தியும் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபட்டனர். வியாழக்கிழமை (மார்ச்1) காலை 7மணிக்கு மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற கோயிலின் முகப்புப் பகுதியில் குலையுடன் கூடிய வாழை மரங்களை கட்டி வழிபட்டனர். சங்ககிரி மலையில் உள்ள கோட்டை மாரியம்மன், சங்ககிரி நகர் வாணியர் காலனி பகுதியில் உள்ள ஸ்ரீ அல்லிகுண்டம் மாரியம்மன் கோயிலிலும் பொங்கல்விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...