ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன் மூவர் தீக்குளிக்க முயற்சித்ததால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ஆத்தூரை அடுத்த மஞ்சினி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராமலிங்கம், கஞ்சமலை கோனார் மகன் ராமகிருஷ்ணன் ஆகியோர் குடும்பங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 1986-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. நிலங்களுக்கான சந்தை மதிப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்டவர்கள் பெற மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து போராடியும் நிலத்தை தர மறுத்தால் பாதிக்கப்பட்டோர், கோட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர். இரு குடும்பத்தைச் சேர்ந்த 19 பேரில் 3 பேர் தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைக்க முயற்சித்தனர்.இதனை அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி அவர்களை அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?

கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

