தம்மம்பட்டி ஆறுகளில் தடுப்பணைகள் கட்டக்கோரி, தம்மம்பட்டிக்கு திங்கள்கிழமை வந்த மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தம்மம்பட்டி பொதுநலக்கமிட்டியினர் கோரிக்கை விடுத்தனர்.
தம்மம்பட்டியில் சிவன் கோயில் அருகே பெரியாற்றின் குறுக்கே கடந்த பத்து வருடத்துக்கு முன்பு 11.75 லட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பணை, ஓரிரு மாதங்களிலே ஆற்றில் வந்த நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த இடத்திலும், தம்மம்பட்டி சந்தைப்பேட்டை அருகே செல்லும் வரட்டாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணையுமாக இரண்டு தடுப்பணைகள் கட்டக்கோரி கடந்த ஜனவரி 1ந்தேதி முதல் பிப்ரவரி 20 -ம் தேதி வரை 5 ஆயிரம் பேரிடம் தம்மம்பட்டி பொது நலக்கமிட்டி சார்பாகவும், ஜங்கசமுத்திரத்திலுள்ள ஆன்மிக விஞ்ஞான அறிவு-அன்பு அறிவு மையம் சார்பாகவும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
அனைவரும் கையெழுத்திட்ட மனுவை பிப்ரவரி மாத இறுதியில் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு, பதிவு அஞ்சலில் அனுப்பப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மார்ச் மாதத்திலும், மே மாதத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்னரும் தடுப்பணைகள் கட்ட வேண்டி, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸிடம் சேலம் சென்று தம்மம்பட்டி பொதுநலக் கமிட்டி சார்பில் நேரில் வலியுறுத்தப்பட்டது.
அப்போது ஆட்சியர், அப்பகுதிக்கு நேரில் வரும்போது ஆய்வு செய்வதாக உறுதியளித்தார்.
இந்நிலையில் கூடமலை ஜல்லிக்கட்டுவிழாவை முடித்துக்கொண்டு தம்மம்பட்டி வன ஓய்வு விடுதியில் தங்கிய ஆட்சியரிடம், தம்மம்பட்டி பொதுநலக்கமிட்டி சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் கே.கே.சண்முகம் தலைமையில் , தடுப்பணைகள் கட்ட, நிதி ஒதுக்கீடு செய்து தர வலியுறுத்தினர்.அதற்கு ஆட்சியர், நேரமின்மை காரணமாக, தடுப்பணைகள் கட்டக்கோரும் இடங்களை இன்னொரு நாள் நேரில் வந்து ஆய்வு செய்து, பரிந்துரைப்பதாக உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

