தம்மம்பட்டி பேரூராட்சி பகுதியில் நான்கு நாள்களாக சாலையில் வடிந்து குடிநீர் வீணாகி வருகிறது.
தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளிலும் சனிக்கிழமை வரை 10 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேட்டூரிலிருந்து குடிநீர் வரும் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
வீட்டுக் குடிநீர் இணைப்புகளுக்கும், தெருக்குழாய்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
அதனால் உள்ளூரிலுள்ள நீர் நிலைஆதாரங்களிலிருந்து கடைவீதியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அத்தகைய சூழ்நிலையில் தம்மம்பட்டியில் சந்தைக்கு செல்லும் சாலையில், பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக , கடந்த வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலை சேறாகிவருகிறது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தெருக்குழாய்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டாலும், சந்தை ரோட்டில் குடிநீர் தொடர்ந்து வீணாகி வந்தது. இதுகுறித்து தம்மம்பட்டி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!
வீட்டுக் குறிப்புகள்...

கன்னியாகுமரியில் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டிய விஜய்!

வங்கியில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

