திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஏற்காடுக்கு 7 தண்ணீர் லாரிகள் அனுப்பி வைப்பு

ஏற்காடு மலைப் பாதையில் ஏற்பட்ட காட்டுத் தீ இரண்டாவது நாளாகவும் எரிவதால் ஞாயிற்றுக்கிழமை

Updated On :25 பிப்ரவரி 2019, 8:31 am IST

ஏற்காடு மலைப் பாதையில் ஏற்பட்ட காட்டுத் தீ இரண்டாவது நாளாகவும் எரிவதால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணி முதல் மலைப்பாதை மூடப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
ஏற்காட்டில் போக்குவரத்து வாகனங்கள் அரசுப் பேருந்துகள் இருசக்கர வாகங்கள் அனைத்தும் ஏற்காடு கொட்டச்சேடு குப்பனூர் மாற்றுப் பாதையில்  அனுப்பப்பட்டு வருகின்றன.
அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் பேருந்துகள் பல மணி நேரம் தாமதமாக வந்து செல்கின்றன.
சங்ககிரியில்... ஏற்காடு மலைப்பாதையையொட்டியுள்ள வனப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சங்ககிரி வருவாய்த் துறையின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 லாரிகளில் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டன. சங்ககிரி வருவாய் உட்கோட்ட பகுதிகளில் இருந்து வருவாய்க் கோட்டாட்சியர் மு. அமிர்தலிங்கம் தலைமையில் வருவாய்த் துறையினர் சங்ககிரி, கொங்கணாபுரம் பகுதிகளில் இருந்து 7 லாரிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு தண்ணீரை அனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.