மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறோம்: ஈ.ஆர். ஈஸ்வரன்

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த  அம்மம்பாளையத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்குழு

Updated On :25 பிப்ரவரி 2019, 8:30 am IST

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த  அம்மம்பாளையத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.எஸ். ரமேஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்து எங்கள் கட்சியின் 5 பேர் கொண்ட குழுவின் முதல் கட்டப் பேச்சுவார்த்தை முடிந்தது. 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்னும் 2 நாள்களில் பேசப்பட்டு நல்ல தகவல் தெரிவிக்கப்படும். திமுக கூட்டணி போட்டியிடும் 40 தொகுதிகளிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவுபகல் பாராமல் கூட்டணி வெற்றிக்குப் பாடுபடுவோம்.
தற்போது அதிமுக-பாமக இடையேயான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். அதிமுகவின் வாக்குகளை டிடிவி. தினகரன் பிரிப்பார்.
கடந்த 2009-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அதிமுகவுடன் 7 தொகுதிகளில் நின்று போட்டியிட்ட பாமக தோல்வியைத் தழுவியது. அதுபோல இந்த முறையும் பாமக தோல்வியைத் தழுவும்.  இந்தக் கூட்டணி குறித்து பாமக-அதிமுகவின் தொண்டர்களிடையே சலசலப்பு இருந்து வருகிறது.
ஏழைகளுக்கு ரூ. 2000, ரூ. 6000 வழங்கும் நிதித் திட்டங்களை கடந்த 3 வருடங்களுக்கு முன்பே மத்திய மாநில அரசுகள் வழங்கியிருந்தால் அது நல்ல ஆட்சி என்று கூறலாம். ஆனால், இப்போது தேர்தலை ஒட்டி வழங்குவது மக்கள் விரோதத்தைத்தான் சம்பாதிக்கும் என்றார் அவர்.
பேட்டியின் போது கட்சியின் ஒன்றியச் செயலாளர் விஜயகுமார், மாவட்ட அவைத் தலைவர் பிரபாகரன், துணைப் பொதுச் செயலாளர் சக்தி நடராஜ், தங்கவேல், பொருளாளர் கே.சி.பாலு, மாநில நிர்வாகிகள் சூரியமூர்த்தி, விஷா சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.