அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக நிறைவு விழா

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக ஆறாம் ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2019, 3:08 am IST

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக ஆறாம் ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், மேச்சேரியில் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் ஆலயம் உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா  2013-ஆம்  ஆண்டு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் கும்பாபிஷேக நிறைவு விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு மாகா கும்பாபிஷேக விழாவின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை நடத்தப்பட்டது. 
செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு மஹாகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி நிகழ்ச்சிகளும், பிற்பகல் 3 மணிக்கு நாதஸ்வர வித்வான்களின்  நாதஸ்வர, தவிலிசை நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு சிலம்பாட்ட நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு இன்னிசை பாட்டு பட்டிமன்றமும்
நடைபெற்றது.
புதன்கிழமை காலை 7 மணிக்கு மஹாகணபதி ஹோமம், லலிதாசகஸ்ரநாமம், 108 வலம்புரி சங்காபிஷேகமும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேச்சேரி ஆதிபராசக்தி மன்றங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
பிற்பகலில் அன்னதானமும், மாலை 5 மணிக்கு மேளவாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இரவு திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற நட்சத்திர இசைக் கொண்டாட்டம்
நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.