குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் துவக்கம்

வாக்காளர் விழிப்புணர்வு மன்றத் துவக்க விழாவில் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் 

Updated On :23 ஜனவரி 2019, 8:49 am IST

வாக்காளர் விழிப்புணர்வு மன்றத் துவக்க விழாவில் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு மன்ற சின்னத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரோகிணி ராம்தாஸ் வெளியிட்டார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றத் துவக்க விழாவில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பேசியது:
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் துவக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
அதன் ஒரு பகுதியாக அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் துறை அலுவலகங்களில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
வாக்காளர் விழிப்புணர்வு மன்றத்தில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரையும் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். 
அந்த அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களின் தேர்தல் சம்பந்தமான அனுபவம் உடையவரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும்.
அந்த நபர் மாவட்டத் தேர்தல் அலுவலகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பொறுப்பாளர் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பதன் அவசியம், நேர்மையாக வாக்களிப்பது, வாக்குப் பதிவு இயந்திரம் யாருக்கு வாக்களித்தோம் என காட்டும் கருவி ஆகியவை ஏற்படுத்த வேண்டும். 
வாக்காளர் பதிவு, வாக்களிக்கும் முறை பற்றிய அறிவை பொது மக்களுக்கு புகட்டுவது,  வாக்குப்பதிவு இயந்திரத்தை பற்றி விளக்கி கூறுதல், தங்கள் வாக்கினுடைய மதிப்பு, வாக்களிப்பதன் முக்கியத்துவம் போன்றவற்றை அழைக்கப்பட்டவர்களுக்கு எடுத்துரைத்தல் போன்றவை  இம்மன்றத்தின் நேக்கமாகும்.
இம்மன்றத்தில் 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட எதிர்கால வாக்காளர்கள், 18 முதல் 19 வயது நிரப்பிய வாக்காளர்கள், நடுத்தர மற்றும் இளம் வயதுள்ள பெண் வாக்காளர்கள், முதிர் வயதடைந்த வாக்காளர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள் என்றார்.
முன்னதாக வாக்காளர் விழிப்புணர்வு மன்ற சின்னத்தினை ஆட்சியர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.அருள்ஜோதி அரசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ராஜேந்திர பிரசாத், ஆவின் பொது மேலாளர் குமரேஷ்வரன், மாநில தேர்தல் விழிப்புணர்வு பயிற்றுனர் ரேணுகா ஆலிவர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.