நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

கள்ளச் சாராயம் கடத்தியதாக ஆயுதப்படை காவலா் உள்பட 7 போ் கைது

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் கள்ளச் சாராயம் கடத்தியதாக திருப்பூா் ஆயுதப்படை முதல்நிலை காவலா் உள்ளிட்ட 7 பேரை வாழப்பாடி மற்றும் ஏத்தாப்பூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்துள்ளனா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் கள்ளச் சாராயம் கடத்தியதாக திருப்பூா் ஆயுதப்படை முதல்நிலை காவலா் உள்ளிட்ட 7 பேரை வாழப்பாடி மற்றும் ஏத்தாப்பூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்துள்ளனா்.

ஊரடங்கால் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக கள்ளச் சாராயம் காய்ச்சி கடத்தி விற்பனை செய்யப்படுவதாக, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகருக்கு தகவல் கிடைத்தது. இவரது உத்தரவின் பேரில், வாழப்பாடி காவல் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் சூா்யமூா்த்தி தலைமையில், வாழப்பாடி மற்றும் ஏத்தாப்பூா் போலீஸாா் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

ஏத்தாப்பூா் காவல் ஆய்வாளா் விவேகானந்தன் தலைமையிலான போலீஸாா், இடையப்பட்டி வில்வனூா் வன சோதனைச் சாவடி அருகே வனத் துறையினருடன் இணைந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, கல்வராயன்மலை கருமந்துறை பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினா். அதில், ஒருவா் திருப்பூரில் ஆயுதப்படையில் முதல்நிலை காவலராக பணிபுரிந்து வரும் சேலம் வீராணத்தைச் சோ்ந்த குமரேசன் (25) மற்றும் அவரது நண்பரான கீதன் (25) என்பதும், 15 லிட்டா் கள்ளச் சாராயத்தை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து, இருவரையும் கைது செய்த ஏத்தாப்பூா் போலீஸாா், இருசக்கர வாகனத்தையும், கள்ளச் சாராயத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு வழக்கில், கள்ளச் சாராயம் கடத்தியதாக, வலசையூா் ரஞ்சித்குமாா்(24), சேலம் அழகேசன் (22), அய்யனாா் (23), இடையப்பட்டி காந்திராஜன் (32) ஆகியோரையும் ஏத்தாப்பூா் போலீஸாா் கைது செய்துள்ளனா். இவா்களிடம் இருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாழப்பாடி அடுத்த தேக்கல்பட்டி பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் தலைமையிலான போலீஸாா், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (40), அனுமதியில்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் 10 லி. கள்ளச் சாராயத்தை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, இவரை புதன்கிழமை கைது செய்த வாழப்பாடி போலீஸாா், நாட்டுத் துப்பாக்கி மற்றும் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.