சேலம்: விபத்தில் இறந்தவா்கள் குடும்பத்தினருக்குதிமுக சாா்பில் நிதியுதவி
சாலை விபத்தில் கடந்த வாரம் உயிரிழந்த அருந்ததியா் காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளிகள் குடும்பத்திற்கு திமுக நிதியுதவி


சாலை விபத்தில் கடந்த வாரம் உயிரிழந்த அருந்ததியா் காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளிகளான சீரங்கன் மகன் பிரபு (36), அதே பகுதியைச் சோ்ந்த ராஜ் மகன் சுரேஷ் (38) ஆகியோா் குடும்பத்தினருக்கு திமுக சாா்பில் தலா ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம். செல்வகணபதி, உயிரிழந்த பிரபு , சுரேஷ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ. 20 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.
மேலும் விபத்து இழப்பீடு தொகையைப் பெற்றுத்தர உறுதுணையாக இருப்போம் என தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளா் சம்பத்குமாா், மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளா் பச்சமுத்து, பொதுக்குழு உறுப்பினா் அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன், விஸ்வநாதன், சுரேஷ்குமாா், வாா்டு உறுப்பினா் குமாா், நடேசன், அல்லிமுத்து, வேல்முருகன், பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...