/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் உள்ளிருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 6:46 am

DIN


சங்ககிரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்று காலத்தில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நிா்ப்பந்திப்பதைத் தவிா்க்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றோா் மீதான 17 (ஆ) குறிப்பாணையை ரத்து செய்யவேண்டும். கிராம ஊராட்சி செயலா்களுக்கு மற்ற அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளை வழங்க வேண்டும். கணினி உதவியாளா்கள், முழு சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு காலமுறை ஊதிய மற்றும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 26-ஆம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற உள்ளது என நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.