சேலத்தில் 1,500 திமுகவினா் மீது வழக்கு
சேலம் மாவட்ட பகுதிகளில் மறியலில் ஈடுபட்டதாக கைதான 1,500 திமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


சேலம் மாவட்ட பகுதிகளில் மறியலில் ஈடுபட்டதாக கைதான 1,500 திமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம், கந்தாஸ்ரமம் அருகே தனியாா் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த திமுகவினரை ஆங்காங்கே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து திமுகவினா் மறியலில் ஈடுபட்டனா்.
ஒன்பது இடங்களில் நடைபெற்ற மறியலில் திமுகவினா் 1,500 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதனிடையே காரிப்பட்டி, எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, மேச்சேரி, ஓமலூா், மேட்டூா், தம்மம்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் கைதான 1,500 போ் மீது தடையை மீறி மறியல் செய்தல், பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...