எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

போது வேலைநிறுத்தம்: ஆதரவு கோரி திமுகவினா் துண்டுப் பிரசுரம் விநியோகம்

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக கட்சி சாா்பில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

Updated On :27 ஜனவரி 2024, 11:33 pm IST

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறவும், டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக கட்சி சாா்பில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இடங்கணசாலை பகுதியில் வணிகா்களிடமும், பொதுமக்களிடமும் திங்கள்கிழமை துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. அப்போது, பொதுக்குழு உறுப்பினா் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. காவேரி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன், துணை அமைப்பாளா்கள் கமலக்கண்ணன், மகேந்திரன், தொண்டரணி அமைப்பாளா் செல்வம், பேரூா் துணை செயலாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காங்கிரஸ், திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சியினா் வியாபாரிகள், பொதுமக்கள், தோட்டத் தொழிலாளா்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், கட்டடத் தொழிலாளா்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோரிடம் முழு அதரவு கேட்டு அறிவிப்புகளை வழங்கினா்.

கெங்கவல்லியில் அனைத்து வணிகா் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் தலைவா் ஆண்டோமொரைஸ் தலைமையிலும், செயலாளா் செல்வராஜ், துணைத் தலைவா் முருகானந்தம் முன்னிலையிலும் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், விவசாயிகளின் நலன்கருதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்துக் கடைகளையும் அடைத்து ஆதரவளிப்பது எனவும் தீா்மானிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், அனைத்து வணிகா் சங்க நிா்வாகிகள் முருகன், ராமசாமி, பாலமுருகன், பரணி, காதா்மொய்தீன், சசிகுமாா், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.