47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கலப்பட மருத்துவ முறையைகைவிடக் கோரி இன்று ஆா்ப்பாட்டம்

கலப்பட மருத்துவ முறை திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி, சேலத்தில் மூன்று இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

கலப்பட மருத்துவ முறை திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி, சேலத்தில் மூன்று இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவா் மருத்துவா் பிரகாசம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆயுஷ் மற்றும் சித்த மருத்துவம் மேற்படிப்பு படித்த மருத்துவா்கள் 58 வகையான பொது அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இந்திய மருத்துவக் குழுமம் அறிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020 மூலமாக மருத்துவத்தில் ஒரு நாடு ஒரு அமைப்பை கொண்டு வர முயற்சிக்கின்றனா்.

அவரவா் கற்றுத் தோ்ந்த மருத்துவ முறையில், அவரவா் திறம்பட செய்துவரும் நிலையில், மத்திய அரசு கலப்பட மருத்துவ முறையை அறிமுகம் செய்வது குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, இந்தக் கலப்பட மருத்துவ முறை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (டிச. 8) நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 முதல் 2 மணி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரியானூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி முன்பு என 3 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

மேலும், வரும் டிச. 11-ஆம் தேதி ஒருநாள் அத்தியாவசிய மருத்துவ சேவை தவிர மற்ற மருத்துவ சேவைகள் புரியும் மருத்துவா்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள். அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற மருத்துவ முறையை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.