/

வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

கெங்கவல்லி வேளாண் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து வேளாண் இணை இயக்குநா் கணேசன் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:25 am

DIN

கெங்கவல்லி வேளாண் வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து வேளாண் இணை இயக்குநா் கணேசன் ஆய்வு மேற்கொண்டாா்.

கெங்கவல்லி வட்டாரத்தில் பயிரிட்டுள்ள பருத்தி வயல்களை வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வு செய்தாா். தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் துவரை சி.ஒ.ஆா்.ஜி. 8 ரகம் பயிரிட்டு செயல்விளக்கத்திடல் அமைத்துள்ள விவசாயியின் வயல்களை ஆய்வு செய்தாா். உழவா் அலுவலா் தொடா்புத் திட்டத்தின் வாயிலாக தினமும் கிராமங்கள்தோறும் விவசாயிகளைச் சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடினாா். பின்னா் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆமணக்கு செயல்விளக்கத் திடலை ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்த ஆய்வுகளின் போது, வேளாண் துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) சீனிவாசன், கெங்கவல்லி வட்டார வேளாண் உதவி இயக்குநா் சித்ரா, கெங்கவல்லி வட்டார வேளாண் உதவி வேளாண் அலுவலா்கள் மணிமாறன், அருள்மணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.